44. எடுக்கப்படாத ஏடுகளும் எழுத்துக்களின் தாக்கங்களும் | UNPUBLISHED MANUSCRIPTS AND INFLUENCES OF WRITING
Update: 2020-08-16
Description
எளிதில் எடுத்துப்படிக்க இயலாத
ஏடொன்று உண்டு - அதுதான்
நம் வாழ்க்கை ஏடு.
பக்கங்களை புரட்டமுடியாது,
பாதிவாழ்க்கை புத்தகமாய் நிற்கும்!
படிக்க படிக்கப் பாதைமாறும்,
படித்தபின் எழுத்துக்களாய் நிற்கும்!
எழுத்துக்களை எண்ணஇயலாது - அவை
வாழ்வில் வந்தவர்களைக் குறிக்கும்!
வந்தவர்களை எண்ணினால்
நொந்தநிலை நினைவில்வரும்!
வாழ்வில்நாம் எடுக்காத ஏடுகள்பல,
எடுக்கப்படாத ஏடுகளுள் ஒன்றே
நாம் வாழும் வாழ்க்கை!
ஒதுக்கவும் முடியாது!
ஒதுங்கி நிற்கவும் முடியாது!
அது…...நம் வாழ்வு!
நாம்…...வாழ்ந்தேயாக வேண்டும்!
இது புதுகவித்தொகுப்பு.
இந்த ஏட்டிற்குஏனோ
சட்டைபோட நமக்கு மனமில்லை!
சங்கடங்களை சட்டைபைக்குள்
போட்டுக்கொண்டு விடுமோ
எனும் சஞ்சலம்தான்.
இந்த ஏட்டைபப்ளிஷ்
பண்ணவும் முடியாது,
பப்ளிசிடி ஆக்கவும்கூடாது.
பாவப்பட்ட நாம்என்ன
பவித்திர பரமாத்மாவாழ்க்கையா
Comments
In Channel























